Raja Rani 2 Today Episode | 19.04.2022 | Vijaytv
Raja Rani 2. 19.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை கோவிலுக்கு கிளம்பும்படி சிவகாமி கூறினார். சந்தியா உடனே சரவணனுக்கு அழைத்து பேசினார். கோவிலுக்கு கிளம்ப சொன்னதை பற்றி கூறினார். கோவிலுக்கு சென்று 108 விளக்கு ஏற்றினால் எப்படி கோச்சிங் சென்டர் செல்ல முடியும் என்று கேட்டார். சரவணன் உடனே நான் பார்த்துக்கொள்கிறேன். உடனே அங்கு வருவதாக கூறினார். பின் சிவகாமி திரி எப்படி திரிப்பது என்று சந்தியாவுக்கு சொல்லி கொடுத்தார். கோவிலுக்கும் கிளம்பி சென்றார்கள். அங்கு சென்று 108 விளக்கு ஏற்ற ஆரம்பித்தார் சந்தியா. ஆனால் விளக்கு ஏற்ற தெரியாமல் சந்தியா பதறினார். அப்போது பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்து கிண்டல் செய்தார். தன் மருமகள் வீட்டு வேலை அத்தனையும் தெரிந்தவள் என்று பெருமை பேசினார். அதை கேட்ட சிவகாமி சந்தியா மீது கோவம் கொண்டார். உடனே விளக்கு ஏற்றுமாரு கடிந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…