Raja Rani 2 Today Episode | 19.09.2022 | Vijaytv
Raja Rani 2. 19.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி மற்றும் ஜெஸ்ஸி திருமணம் சம்மந்தமாக பேசினார்கள். நாளை மறுநாள் நல்ல நாள் தன அன்றே நிச்சயதார்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஜெஸ்ஸிக்கு தனியாக ஒரு இடம் பார்த்து அவருக்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்து தருவதாக கூறினார். அதை சிவகாமி விரும்பவில்லை என்றாலும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த திருமணத்தை நடத்துவது முழுக்க முழுக்க சந்தியாவின் பொறுப்பு என்று கூறினார். இந்த வீட்டு மூத்த மருமகளாக நின்று இதை அவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என்று கூறினார். இதனால் சரவணன் சற்று பதட்டம் அடைந்தார். எப்படியும் இந்த நேரத்தில் சந்தியாவுக்கு ட்ரைனிங் போக வேண்டிய சூழ்நிலை வரும் என்று அவர் பயந்தார். அதை பற்றி சிவகாமி அம்மாவிடம் சொல்ல முயற்சி செய்தார் ஆனால் சொல்ல முடியவில்லை. ஆனால் சந்தியா தன்னால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…