Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv
Rajarani2.19.10.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின் இரவு சாப்பிடும்போது ஆதிக்கு லைசன்ஸ் எடுப்பதற்கு ஃபார்ம் நிரப்பி தருமாறு கூறினார். அதை பார்த்த சிவகாமி தன் மகனை பற்றி மிகவும் பெருமையாக சந்தியாவிடம் கூறினார். பார்வதி தன்னை பார்க்க வராத சோகத்தில் பாஸ்கர் இருந்தார். அவரை வேண்டும் என்றே பார்வதி மீது அதிக வெறுப்பை வரவைக்க விக்கி அவரை சந்தித்து பேசினார். பார்வதி வேறு யாரையும் காதலிக்கிறாரோ இல்லை உங்கள் மீது விருப்பம் இல்லையோ என்று மீண்டும் அவரை குழப்பினான். சரவணன் கடையில் யாரோ தவரவிட்டதாக ஒரு பாஸ்போர்ட் ஒன்றை வீட்டிற்க்கு எடுத்து வந்தார். அதை பார்த்ததும் சந்தியா இதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அவர்கள் இதை உரியவரிடம் சேர்த்துவிடுவார்கள் என கூறினார். ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. சாதாரணமாக அலட்சியப்படுத்தினர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….