Raja Rani 2 Today Episode | 19.12.2022 | Vijaytv
Raja Rani 2. 19.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி புது வண்டி வாங்கி வந்ததற்கு ஏது பணம் என்று கேட்டார். அதற்கு ஆதி அவர் அம்மாவை சற்றும் மதிக்காமல் எனக்கு இப்போது திருமணம் ஆகி விட்டது என்றும் இதை பற்றி யாரும் எதுவும் கேட்க வேண்டாம் என்றும் கூறினார். இது என் தனி குடும்ப விஷயம் என்றும் பேசினார். இதனால் மனம் நொந்து போன சிவகாமி அழுக ஆரம்பித்துவிட்டார். உடனே ரவி அப்பா மற்றும் செந்தில் அனைவரும் ஆதியை அழைத்து அம்மாவை எப்படி நீ மரியாதை இல்லாமல் பேசலாம் என்று கேட்டார்கள். ஆனால் ஆதி அதற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இது வெறும் நடிப்பு என்றும் கூறினார். இதனால் மேலும் கோவம் கொண்டார் சிவகாமி. செந்தில் அவரை கண்டித்தார். ஆனாலும் ஆதி அதை காதில் வாங்கவில்லை. பரந்தாமன் உடன் சேர்ந்து கருணாகரனும் சரவணன் வளர்ச்சியை அழிக்க முடிவு செய்தார். செந்திலுக்கு கருணாகரன் துணையாக நிற்பார் என்று ஊரே விளம்பரம் செய்தார்கள். அதை பார்த்த சரவணன் செந்தில் இடம் இது நல்லதுக்கு இல்லை, கருணாகரனால் எந்த அளவுக்கு நம் குடும்பம் துயரத்தில் இருந்தது என்று தெரிந்தும் அவருக்கு துணையாக இருப்பேன் என்று கூறுவது நல்லதல்ல என்று கூறினார். ஆனல் செந்தில் அதை காதில் வாங்கவே இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….