Raja Rani 2 Today Episode | 20.06.2022 | Vijaytv
Raja Rani 2. 20.06.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணன் இருவரையும் குற்றாலக்துக்கு கொஞ்ச நாள் அனுப்பி வைத்தால் கண்டிப்பாக குழந்தை உண்டாகும் என்று நம்பினார் சிவகாமி. அதனால் அதை உடனே செய்ய வேண்டும் என்று நினைத்தார். உடனே சரவணன் மற்றும் சந்தியாவை அழைத்து பேசினார். உடனே குற்றாலத்தில் கிளம்ப சொன்னார். அவர்கள் ஒன்றும் புரியாமல் நின்றார்கள். உடனே ஒரு மணி நேரத்தில் துணிகளை எடுத்து வைத்து கிலம்பாரு கூறினார். கடையை தானும் ரவியும் பார்த்துக்கொள்வதாக கூறினார். வேறு எதையும் பற்றி கவலை இல்லாமல் போய் வரட்டும் என்று கூறினார். ஆனால் சரவணன் உடனே கிளம்புவது சிரமம் என்று நினைத்தார். மேலும் சந்தியாவுக்கு நாளை பரிட்சை இருப்பதால் கண்டிப்பாக அவரை எங்கும் அழைத்து செல்ல கூடாது என்று நினைத்தார். ஆனால் சந்தியாவிடம் தான் இந்த குற்றாலம் செல்லும் பயணத்தை தடுத்து நிருத்துவேன் என்று கூறினார். அதன் படி சிவகாமியிடம் தனக்கு நிறைய வேலை இருப்பதால் போக முடியாது என்று கூறினார். இதனால் சிவகாமி சந்தியா மீது கோவம் கொண்டார். அர்ச்சனாவுக்கு எரிச்சலாக இருந்தது. அவர்கள் மட்டும் எப்படி வெளியே சென்று குதூகலமாக இருக்கலாம். அப்படி சென்றால் குழந்தை பிறந்து விடுமே என்று நினைத்து பயந்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…