Raja Rani 2 Today Episode | 20.09.2022 | Vijaytv
Raja Rani 2. 20.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி ஜெஸ்ஸியின் திருமணம் பற்றியே பேச்சு வழக்கம் போல் இன்றும் பேசினார்கள் குடும்பத்தார்கள். அப்போது திருமணத்துக்கு தேவையான பணத்தை பற்றி யாருமே பேசவில்லையே என்று ரவி அப்பா ஆர்மபித்தார். சரவணன் தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை கடன் தான் வங்க வேண்டும் என்று கூறினார். செந்தில் தன்னிடமும் இல்லை எதாவது ஏற்பாடு செய்யலாம் என்றார். அப்போது சந்தியா தன் நகையை அடமானம் வைத்து செய்யலாமா இல்லை என்றால் வித்து விடலாம் என்று கூறினார். இதை கேட்டதும் சிவகாமி இந்த வீட்டில் பணம் பற்றி பேசினால் மட்டும் யாருமே கண்டுகொள்வதில்லை என்று கூறினார். எப்போதுமே பணத்தை சந்தியா மற்றும் சரவணன் தன் செய்கிறார்கள் என்று கோவம் கொண்டார். பின் பத்திரிக்கையை கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம் என்று கூறினார். பின் அனைவரும் குடும்பமாக சேர்ந்து கோவிலுக்கு கிளம்பினார்கள். இதற்கு இடையில் சக்கரை விளையாட்டு பொருள் என நினைத்து வைத்து இருந்த ஒரு பொருளை பார்த்ததும் அது சரவணன் ஜெயித்து வாங்கிய 5 லட்சம் பணத்தில் இருந்ததை போல் இருப்பதாக சந்தேகம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…