Raja Rani 2 Today Episode | 21.01.2022 | Vijaytv
Raja Rani 2.21.01.2022
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் வாங்கிய பரிசுகள், மெடல்கள், பட்டங்கள் அனைத்தையும் பார்த்து பழசை எல்லாம் நினைத்து பார்க்கிறார். தன் அப்பா நான் ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று எண்ணி எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ள வைப்பர். அந்த கனவு கனவாகவே போய் விடுமா? எப்படி அதை நடத்துவது என்று யோசித்தார். சரவணன் சந்தியா வாங்கி இருக்கும் பரிசுகளை பற்றி பெருமையாக பேசினார். ஒன்னுமே தெரியாத என்னைய இவளோ பெரிய போட்டியில் கலந்துகொள்ள வைத்து பரிசு வாங்க வைத்து பெருமை சேர்த்துவிட்டீர்கள்.அதே போல் உங்களுக்கு எதாவது ஆசை கனவு இருந்தால் தயங்காமல் கூறும்படி கேட்டார். அதற்கு தயங்கி தயங்கி தன் கனவை பற்றி பேச ஆரம்பித்தார் சந்தியா.அப்போது சிவகாமி சந்தியாவை அழைக்கவே அதை பாதியில் நிறுத்திவிட்டார்.ஆதி தனக்கு ஒரு ஃபோன் வாங்க வேண்டும் என்று சரவணனிடம் கேட்டார். அதான் நீயே சம்பாதிக்கிராயே என்று கேட்டதற்கு, என் சம்பளம் வர இன்னும் 10 நாட்கள் உள்ளது அதனால் அவசரமாக தேவை படுகிறது. அதன் விலை ஒன்றரை லட்சம் என்றும் கூறினார். சரவணனும் வாங்கி தருகிறேன் என்று கூறினார். ஆனால் அதை பார்த்த சந்தியா அதற்கு என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…