Raja Rani 2 Today Episode | 21.02.2022 | Vijaytv
Raja Rani 2.21.02.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து சந்தியாவின் பூர்வீக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீட்டை பார்த்ததும் சந்தியா தன் பழைய நினைவுகளை நினைத்து கண் கலங்கினார். வீட்டை சுத்தம் செய்யலாம் என்று உள்ளே சென்றார்கள் ஆனால் அங்கு எல்லாமே சுத்தம் செய்து தான் வைக்கப்பட்டிருந்தது. பின் சந்தியா தன் சின்ன வயதில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து சரவணனுக்கு எடுத்து காட்டினார். அதை எல்லாம் பார்த்து சரவணன் ரசித்தார். பின் சந்தியா சரவணன் கடையில் கூட்டம் இருக்கும் என்பதால் அவரை கிலம்பும்படி கூறினார். கிளம்பும்போது சரவணன் வருத்தமாக கிலம்புவதை பார்த்து, சந்தியா அவரை காதலிக்கும் விஷயத்தை கூறினார். சரவணன் அதை கேட்டதும் சந்தோசம் அடைந்தார். இருவரும் காதல் செய்ய ஆரம்பிக்கும்போதே யாரோ கதவை தட்டினார்கள். சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் வீட்டிற்கே வந்து விட்டார்கள். பின் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார் சந்தியா. குழந்தை அப்படியே அவரது அண்ணியின் சாயல் என்று கூறினார். பின் சந்தியாவிடம் அவரது அண்ணன் அவருக்கு செய்த துரோகத்தை நினைத்து வருந்தினார். ஆனால் சந்தியா தான் சந்தோசமாக இருப்பதாக கூறினார். தன் கனவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் என்றும் கூறினார். ஆனால் அவரது அண்ணன்,தான் சரவணன் இடம் இந்த விஷயத்தை பற்றி பேச போவதாக கூறினார்.அதற்கு சந்தியா என்ன சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…