Raja Rani 2 Today Episode | 21.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் பலத்த யோசனையில் இருந்தார். சந்தியாவே இப்படி அவர் கனவை மறுத்தால் எப்படி அவர் பெற்றோர் கனவை நிறைவேற்றுவது என்று குழம்பினார். அப்போது மார்கெட்டில் ஏதோ சண்டை என எல்லாரும் பதட்டமாக ஓடினார்கள். அதை பார்த்த சரவணன் ஒன்று புரியாமல் நின்றார். அப்போது செல்வம் பதட்டமாக வந்து சந்தியாவுக்கு எதோ பிரச்சனை என்பது போல் பேசினார். இதனால் உடனே மார்கெட்டிற்கு கிளம்பினார் சரவணன். அங்கு சந்தியா இரண்டு ரவுடிகளை அடித்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்த சரவணன் அவரின் தைரியத்தை பார்த்து ரசித்தார். ஒரு பொண்ணை அந்த ரவுடிகள் கையை பிடித்து இழுத்து வம்பு செய்ததால் அவர்களை அடிப்பதாக சரவணனுக்கு தெரிய வந்தது. அருகில் இருந்தவர்கள் சந்தியாவை பார்த்து புகழ்ந்து பேசினார்கள். தைரியமான காக்கி சட்டை போடாது ஒரு போலீஸ் போல் நாட்ந்து கொள்வதாக பேசிக்கொண்டார்கள். அதை பார்த்து சரவணனும் ரசித்தார். சந்தியாவை பாராட்டினார். உங்களுக்குள் இருக்கும் அந்த போலீஸ் அப்போ அப்போ எட்டி பார்க்கிறது என்றும் கூறினார். ஆனால் சந்தியா அதை பற்றியெல்லாம் இனி பேச வேண்டாம் என்று கூறினார். வீட்டில் இதை பற்றி அர்ச்சனா சிவகாமி இடம் சொல்லி சந்தியாவை திட்டுவாங்க வைக்கலாம் என்று திட்டம் போட்டார். ஆனால் அதை செந்தில் ரவி இருவரும் சொள்ளவிடாமல் செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author