ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி வந்ததும் அவரது குழந்தையை பார்த்து ரசித்தார். இது போல் சரவணன் அண்ணனுக்கும் ஒரு குழந்தை வர வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் சந்தியா வேலைக்கு கிளம்பினார். ஆனால் அதற்கும் வீட்டிலேயே மயக்கம் அடைந்தார். அவரை அனைவரும் சேர்ந்து தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார்கள். பின் அர்ச்சனா தன் சந்தேகத்தை மீண்டும் கேட்டார். பின் சந்தியாவும் அதற்கு வெக்கப்பட்டு சிரித்தார். அடுத்து ஜெஸ்ஸியும் சந்தியா கர்ப்பமாக இருப்பதை புரிந்து கொண்டார். பின் சிவகாமி இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் சந்தோசத்தில் அழுதார். தான் வேண்டிய கடவுள் கை விடவில்லை என்று கூறினார். ஆனால் இந்த சந்தோசமான விஷயத்தை கொண்டாட தன் மகன் கூட இல்லையே என்று வருந்தினார். பின் ஆறு மாதம் கழித்து சரவணன் வீட்டுக்கு திரும்பினார். அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அனைவரும் அருகில் இருந்தாலும் சரவணனின் கண் சந்தியாவை தான் தேடியது. அப்போது தான் சந்தியா வெளியே வந்து பார்த்தார். அவர் கர்ப்பமாக இருப்பது சரவணன் அப்போது தான் தெரிந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…