Raja Rani 2 Today Episode | 21.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் பூ வாங்கி சந்தியாவுக்கு வைத்து விட்டார். அப்போது இன்று கிளாசுக்கு ஜெஸ்ஸி என்று புது பெண் ஒருவர் சேர்ந்து இருப்பதை சரவணன் இடமா கூறினார். அதே நேரம் சிவகாமி ரவி யிடம் தன் புலம்பல்களை கொட்டி தீர்த்தார். சரவணன் கூச்ச சுபாவம், சந்தியா போலீஸ் கனவு என்று அவர்கள் வாழ்க்கையில் இன்னும் அடுத்த அடி எடுத்து வைக்கமல் இருக்கிறார்கள் என்று புலம்பினார். கொஞ்ச நாளில் மீண்டும் அவர்களை குற்றாளதுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அப்போது தான் சீக்கிரம் குழந்தை உண்டாகும் என்று நம்பினார். அடுத்த நாள் ஆதி ஒரு பெண்ணை பார்க்க அவசரமாக கிளம்பினார். அங்கு வந்தவர் சந்தியா உடன் படிக்கும் ஜெஸ்ஸி. ஜெஸ்ஸியும் ஆதியும் காதலிக்கிறார்கள். இன்று ஜெஸ்ஸியின் பிறந்தநாள் என்பதால் ஆதி அவருக்கு தங்கத்தில் செயின் வாங்கி கொடுத்தார். மேலும் அவர்கள் திருமணத்தை பற்றி சீக்கிரமே முடிவு எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author