Raja Rani 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் செந்தில் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவகாமி புலம்பி தள்ளினார். இதனால் ரவி நான் போய் பேசி பார்க்கிறேன் என்று கூறினார். பின் செந்தில் இடம் வந்து பேசவும் செய்தார். ஒரே வீட்டில் அண்ணன் தம்பி இருவரும் போட்டி இடுவது சரி இல்லை. பதவிக்காக போட்டி போடுவது போல் சொந்தங்கள் பேசுவார்கள் என்று புலம்பினார். ஆனால் செந்தில் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் போட்டியில் நிற்பது உறுதி என்றார். மேலும் அர்ச்சனா இதை சரவணன் இடம் சென்று சொல்லி வாபஸ் வாங்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். பின் ரவி அப்பா சரவணன் இடமும் பேசிப்பார்தார். நீயாவது தம்பிக்கு விட்டுகொடுக்களாம் என்று. ஆனால் சரவணன் எனது போட்டி அந்த பரந்தாமன் தான் செந்தில் இல்லை. என்னை நம்பியவர்களை நான் கை விட மாட்டேன் என்று கூறினார். இதனால் ரவி அப்பாவும் வேறு வழி இல்லாமல் கிளம்பினார். அடுத்த நாள் மனு தாக்கல் கொடுக்க இருவருமே கிளம்பினார்கள். செந்திலுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஒரு பக்கம் வந்து அவரை அழைத்து சென்றார்கள். பின் சரவணனுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அவரை அழைத்து சென்றார்கள். இதை ஆர்த் சிவகாமி அம்மா நொறுங்கி போனார். யார் வெற்றி பெற்றார் யார் தோல்வி பெற்றாலும் இரண்டும் நம் மகன்கள் தானே என்று புலம்பினார். அதே நேரம் இன்று பயிற்சி எதுவும் இல்லை என்று சந்தியாவுக்கு தெரிய வந்தது. உடனே ஜோதி சேட்டா சந்தியா மூவரும் சேர்ந்து வெளியே ஊர் சுற்ற கிளம்பினார்கள். அதை சரவணனுக்கு அழைத்து சொல்லவும் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author