Raja Rani 2 Today Episode | 23.02.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணன் அண்ணி மற்றும் அவர்களது குழந்தையை பார்த்த சந்தோசத்தில் வீட்டில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்.வீட்டிலும் அனைவரும் சந்தோசமாக வாழ்த்தினார்கள். ஆனால் அர்ச்சனா மட்டும் அவரை பார்த்து எரிச்சல் அடைந்தார். சரவணன் சந்தியாவின் அப்பா கொடுத்த பேனாவை தேடி கண்டு பிடித்தார். இதை எப்படியாவது சந்தியாவிடம் கொடுத்து நடந்ததை சொல்லவேண்டும் என்று நினைத்தார். உடனே அதை கொடுக்காமல் ஒரு பரிசை கொடுப்பது போல் அதை மடித்து நாளை அவருக்கு எப்படி இந்த பேனா கிடைத்தது என்பது பற்றி கூறவேண்டும் என்று முடிவு செய்தார். விக்கி மீண்டும் பாஸ்கர் இடம் பேசி அவருக்கும் பார்வதிக்கும் எப்படி நிலவரம் என்று தெரிந்து கொண்டார். எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று யோசித்தான். பின் தானும் பார்வதியும் எடுத்த புகை படங்கள் அனைத்தும் அர்ச்சனாவுக்கும் அனுப்பியது நினைவில் வந்தது. உடனே அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். சந்தியாவின் அண்ணன் மணி சந்தியா வீட்டுக்கு வந்தார். அனைவரும் அவரை வரவேற்றார். ஆனால் அவர் தயக்கமாக பேசினார். சந்தியா ஒரு நல்ல மருமகளாக இருக்கிறாளா என்று விசாரித்தார். அதற்கு சிவகாமி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author