Raja Rani 2 Today Episode | 23.06.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இரவு நேரம் அந்த சாமியார் வந்தது, அவர் ஒரு சிலையை எடுத்தது என்று ஆச்சர்யமாக பேசினார் சரவணன். அதை கேட்டு சந்தியா இப்படி மூட நம்பிக்கையை நம்புகிறாரே என்று மனதில் நினைத்தார். பின் சரவணன் நாளை அம்மாவை அந்த இதுக்கு அழைத்து சென்று காமிதால் கண்டிப்பாக அம்மா சந்தோஷ படுவார் என்றார். மேலும் அந்த நேரம் பார்த்து சந்தியா படிக்கும் விஷயத்தை சொல்லி விடலாம் என்று நினைத்தார். சந்தியாவும் அப்படியே செய்யலாம் என்றார். அடுத்த நாள் சிவகாமி டிவியில் தென்காசியில் புது சாமியார் வந்து இருப்பது பற்றி பார்த்தார். பார்த்ததும் உடனே அந்த சக்தி வாய்ந்த சாமியை பார்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதே நேரம் அர்ச்சனா தான் அந்த சாமியாரை பார்த்து மருந்து வாங்கி சாப்பிடுவது தெரிந்துவிடுமோ என்று பதறினார். அதே நேரம் ஆதி தன் குடும்பத்தை ஜெஸ்ஸி பார்த்து விடுவாளோ என்று பயந்தார். சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பரிட்சைக்கு அந்த இடத்துக்கு ஏற்கனவே சென்று விட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…