Raja Rani 2 Today Episode | 23.08.2022 | Vijaytv
Raja Rani 2. 23.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வளைகாப்பு விழா தொடங்கியது. சொந்தங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சரவணன், சந்தியா மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தார்கள். அப்போது ஆதி ஜெஸ்ஸியின் கார் வருவதை பார்த்து பதறினார். அர்ச்சனா தான் கண்டிப்பாக ஜெஸ்ஸியை வர வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஜெஸ்ஸியை பார்த்து வீட்டுக்குள் பயந்து ஓடினார். அதை கவனித்த சந்தியா ஆதி எதற்காக பதட்டம் அடைய வேண்டும்? யாரை பார்த்து இப்படி ஓட வேண்டும் என்று பார்த்தார். வெளியே வரும்போது ஜெஸ்ஸி நிற்பதை பார்த்து ஆச்சர்யபட்டார். ஜெஸ்ஸி எப்படி இங்கு வந்தார் என்று குழம்பினார் சந்தியா. ஜெஸ்ஸிக்கும் அதே குழப்பம் தான். ஆனால் அர்ச்சனாவுக்கு மேக் அப் போட வந்தேன் என்றார். பின் அர்ச்சனாவுக்கு அலங்காரம் செய்யவும் ஆரம்பித்தார். ஆனால் சிவகாமிக்கு ஜெஸ்ஸியை பார்க்கவே எரிச்சலாக இருந்தது. மேலும் ஆதி தவறி விழுந்த போது, ஜெஸ்ஸி பதருவதை பார்த்து மேலும் கோவம் கொண்டார் சிவகாமி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…