Raja Rani 2 Today Episode | 23.09.2022 | Vijaytv
Raja Rani 2. 23.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, காணாமல் போன 5 லட்சம் பணத்தை கண்டு பிடிக்க சந்தியா யோசிக்க ஆரம்பித்தார். இதற்கு மயிலிடம் உதவி கேட்டார். அந்த பணம் கட்டும் ரப்பர் எப்படி இங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்தார். இதனால் தன் மேல் சந்தேகமா என்றும் கேட்டுக்கொண்டார் மயில். ஆனால் அவர் மீது சந்தேகம் இல்லை எனவும், இதை கண்டு பிடிக்க உதவி வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் அனைவரும் ஆதி ஜெஸ்ஸியின் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்துக்கு கிளம்பினார்கள். ஆனால் சந்தியா மற்றும் மயில் மட்டும் எதோ ஒரு சின்ன வேலை இருக்கிறது என்று கூறி வீட்டிலே இருந்தார்கள். பின் அனைவரும் கிளம்பிய பின் ஆதி அறையில் இருந்து அந்த பொருள் கிடைத்ததால் ஆதி அறையை முதலில் சோதனை போட்டார்கள். ஆனால் அர்ச்சனா கண்டிப்பாக இத்தனை நாட்கள் கழித்து அந்த திருடனை கண்டு பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார் செந்தில் இடம். ஆனால் செந்தில் கண்டிப்பாக தன் அண்ணி கண்டு பிடிப்பார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…