Raja Rani 2 Today Episode | 23.12.2022 | Vijaytv
Raja Rani 2. 23.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் இந்த சூழ்ச்சி கண்டிப்பாக பரந்தாமன் வேலையாக தான் இருக்கும் என்று கூறினார். ஆனால் செந்தில் தன்னை தான் குத்தலாக பேசுகிறார் என்று கத்தினார். ஆனால் சரவணன் நம் வீட்டில் இருக்கும் கோடோன் வரைக்கும் வந்து யார் அந்த கலப்பட எண்ணெயை வைத்தது? யார் செய்து இருக்க முடியும். கண்டிப்பாக நம் வீட்டில் யாரோ ஒரு நபர் தான் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார். உடனே அர்ச்சனா என்னை தான் குத்தலாக சொல்கிறார் என்று சண்டைக்கு வந்தார். ஆனால் சரவணன் பொறுமையாக நான் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்று கூறினார். பின் இங்கு நடந்த களேபரங்களை சந்தியாவிடம் சரவணன் கூறினார். அதை கேட்டதும் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் எனக் உங்கள் அருகில் இருக்க முடியவில்லையே என்று புலம்பினார். மேலும் அடுத்த பயிற்சி தான் மிகவும் ஆபத்தான ஒன்று என்று கூறினார். எப்படியும் அந்த காட்டுக்குள் சமூக விரோதிகளை பார்த்து சந்திக்கும் சமயமும் வரலாம் என்று கூறினார். இதை கேட்ட சரவணன் பதட்டம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….