Raja Rani 2 Today Episode | 24.01.2022 | Vijaytv
Raja Rani 2.24.01.2022
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டார்கள். பின் தன் வாழ்நாளில் இவ்வளவு பணத்தை பார்த்தது இல்லை இதான் முதல் தடவை என்று பேசிக்கொண்டார்கள். பின் இருவரும் தூங்கிய பின் நேரம் பார்த்து அர்ச்சனா அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதே போல் ஆதியும் நாத பணத்தை திருட நேரம் பார்த்து கொண்டு இருந்தான். காலையில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் பணத்தை பேங்க்கில் போட்டு விடலாம் என்று அதை எடுக்க செல்லும்போது பணப்பையை காணவில்லை. உடனே தங்கள் அறை முழுவதும் தேடி பார்த்தார்கள். ஆனால் காணவில்லை. இதனால் பதட்டத்தில் சரவணன் வீட்டில் அனைவரையும் அழைத்து விஷயத்தை கூறினார். சரவணனுக்கு அர்ச்சனா மீதும் ஆதி மீதும் சந்தேகம் வந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உடனே போலீசில் புகார் கொடுக்க போவதாக கூறினார். செந்திலும் அதான் சரியான வழி உடனே போய் குடுத்து விடலாம் என்றார். ஆனால் சிவகாமி போலீசிடம் சென்றால் தன் குடும்ப மானம் போய் விடுமோ என்று பயந்தார். அதனால் இந்த வீட்டில் இருப்பவருக்கு 1 நாள் அவகாசம் தருகிறேன் அதற்குள் யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை திருப்பி வைக்குமாறு கூறினார். இல்லை என்றால் கண்டிப்பாக தானே போலீசில் புகார் கொடுப்பேன் என்றார். குடும்பமே குழப்பத்தில் இருந்தது. ஆதி தான் எடுத்த பணத்தை பற்றி எந்த தகவலும் சொல்லாமல் மூடி மறைத்து. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…