Raja Rani 2 Today Episode | 25.01.2022 | Vijaytv
Raja Rani 2.25.01.2022
ராஜா ராணி தொடரில் இன்று, காணாமல் போன பணத்தை நினைத்து சரவணன் வருந்தினார். இவளோ கஷ்டங்கள், எவ்ளோ அவமானங்கள் எல்லாம் செய்து இந்த பணத்தை பெற்று பரிசையும் வென்றேன். இதுக்காக சந்தியா இவளோ முயற்சிகள் செய்தார் , அத்தனையும் இப்படி வீணாகிவிட்டதே என்று வருந்தினார். சந்தியா வீட்டில் யார் எடுத்து இருப்பார்கள் என்று யோசித்தார். அவரது சந்தேகம் அர்ச்சனா மீது தான் இருந்தது. சரவணன் கூட அதையே தான் யோசித்தார். சிவகாமி ரவியிடம் தனியாக புலம்பினார். சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இவளோ கஷ்டங்களை தாண்டி இதை பெற்றார்கள். ஆனால் இந்த வீட்டில் யாரோ ஒரு ஆள் இப்படி செய்வது வெளியில் தெரிந்தால் மானக்கேடு என்று கூறினார். செந்திலிடம் அர்ச்சனா யாருக்குமே இந்த பணம் கிடைக்கவில்லையே என புலம்பினார். ஒரு வேளை சரவணன் மற்றும் சந்தியா இருவரும் திட்டம் போட்டு இதை ஒளித்து வைத்து வீட்டில் நாடகம் போடுகிறார்கள் என்று சந்தேகம்கொண்டார். இப்படி செய்தால் அந்த பணத்தை பங்கு போடாமல் அவர்களே வைத்து கொள்வதற்காக இப்படி திட்டம் போட்டு செய்கிறார்கள் என்றும் கூறினார். ஆனால் செந்தில் அதை காதில் வாங்காமல் அடுத்த வேலையை பார்த்தார். சந்தியா போலீஸிடம் புகார் கொடுப்பது தான் நல்லது என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் செய்தால் வீட்டு மானம் போய்விடும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…