Raja Rani 2 Today Episode | 25.05.2022 | Vijaytv
Raja Rani 2. 25.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் அறையில் கிடந்த பென்டிரைவை எடுத்து என்னவென்று புரியாமல் பார்த்தார். அதை திறந்து பார்த்தால் பார்வதி புகைப்படம் மற்றும் திருவிழா நடக்கும் கோவில் பற்றிய புகைப்படம் என்று இருந்தது. உடனே சந்தேகம் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க கிளம்பினார். கிளம்பும் நேரம் பார்வதியின் மாமியார் மற்றும் மாமனார் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அவர்களிடம் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் படத்துக்கு சென்றதாக கூறினார். மேலும் பாஸ்கரை ஒரு அறையில் ஒளித்து வைத்தார் சந்தியா. பின் பார்வதி மற்றும் பாஸ்கர் வர நேரம் ஆகும் என்று கூறியதால் அவர்களும் வீட்டுக்கு கிளம்பினார்கள். பின் போலீஸ் ஸ்டேஷனில் சந்தியவுக்கு கிடைத்த விவரங்களை கூறினார். இதனால் கமிஷனர் சந்தியாவை தனியாக அழைத்து பேசினார். மேலும் விவரங்களை கலந்து கொண்டார்கள். சந்தியா வெளியே சென்ற நேரம் பார்த்து செல்வம் சரவணன் அறையில் தேடி பார்க்க யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே வந்தான். மயில் இடம் தனக்கு டீ போடும்படி கூறிவிட்டு அவர் வேலையை ஆரம்பித்தார். ஆனால் இங்கு தேடியும் அந்த பென்டிரைவ் கிடைக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…