Raja Rani 2 Today Episode | 26.10.2021 | Vijaytv
Rajarani2.26.10.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒரு அறையில் இருப்பதை பார்த்து சிவகாமி மற்றும் அங்கு உள்ளவர்கள் தவறாக புரிந்துகொண்டனர். சிவகாமி கோவத்தில் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்ததும் சந்தியாவை திட்டி தீர்த்துவிட்டார். என்றும் இல்லாத அதிசயமாய் இன்று சிவகாமியே வாயடைத்து போகும்படி சந்தியா தன் குரலை உயர்த்தி பேசினார். தான் சொல்வதை கேட்டு பின் முடிவை எடுக்குமாறு கூறினார். பின் சந்தியா இந்த சமையல் போட்டியில் கலந்துகொள்ள சரவணன் தகுதி ஆனவர். அதனால் அவரை கலந்துகொள்ள வைக்கவே அவரை தனியாக கூட்டி சென்றதாக கூறினார். உடனே ஆதி தன் ஃபோனில் அந்த போட்டியை பற்றி படித்து பார்த்து, இதெல்லாம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொள்வார்கள். சரவணனுக்கு பூந்தி லட்டு இதான் தெரியும் என கிண்டல் செய்தார். அர்ச்சனாவும் சேர்ந்து கேலி செய்தார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சந்தியா சரவணனுக்கு பரிந்துபேசினார். பின் சரவணன் இந்த போட்டிக்கு பொகிறானா என்று அவனே முடிவு எடுக்கட்டும் என்று சிவகாமி கூறினார். சரவணன் என்ன முடிவு செய்தார்? காணொளியை பார்க்க…