ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சாமியார் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்களை பார்த்த சிவகாமி மீண்டும் சாமியிடம் தரிசனம் செய்யலாம் என்று அழைத்து சென்றார். ஆனால் சரவணன் பாதியில் நிறுத்தி அவரிடம் உண்மைகளை சொல்ல ஆரம்பித்தார். சந்தியாவை இந்த இடத்தில் தான் சந்தியா போலீஸ்க்கு படிக்கிறார் என்று கூறினார். இது அவரது கனவு மட்டும் இல்லை, அவரது அப்பா அம்மாவின் ஆசையும் கூட, அதனால் இதை நிறைவேற்றுவது என் கடமை என்று கூறினார். ஆனால் அதை கேட்ட சிவகாமி கோவத்தின் உச்சத்துக்கு சென்றார். தன்னிடமும் குடும்பத்திடவும் பொய் சொல்லி இப்படி சந்தியாவை படிக்க வைப்பது அவரை மேலும் கோவமாக்கியது. வீட்டுக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று கூறினார் சிவகாமி. மேலும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் தனிகுடுத்தனம் செல்லட்டும் என்று கூறினார். இதுவே தன் முடிவு என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…