Raja Rani 2 Today Episode | 27.12.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இந்த போட்டியில் இனி கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்தார்கள். சரவணன் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றார். ஆனால் சந்தியா ஒரு நாள் இங்கேயே இருக்கலாம் எதாவது ஒரு வழி பிறக்கும் என்று கூறினார். பின் சரவணன் அதற்கு ஒத்துக்கொண்டார். சந்தியா ஆதியிடம் லேப்டாப் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். பின் சரவணன் தூங்கிய பின் இரவு முழுவதும் எதாவது வழி இருக்கிறதா என தேட ஆரம்பித்தார். அதிகாலையில் அவருக்கு ஒரு வழியும் கிடைத்தது. சிக்கன் போலவே மரக்கரியால் செய்த ஒரு சிக்கன் ஒன்றை வைத்து இந்த போட்டியில் சமைக்கலாம் என்று கூறினார். சரவணன் அது ஏமாற்றுவது போல் உள்ளதாக கூறினார். ஆனால் சந்தியா சமைத்து முடித்ததும் இதில் வெற்றி பெற்றால் உண்மையை சொல்லிவிடலாம் என்று கூறினார். பின் இருவரும் சமைக்க தயார் ஆனார்கள். சிவகாமி மற்றும் ரவி இருவரும் சரவணன் இந்த போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருந்தினார்கள்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author