Raja Rani 2 Today Episode | 27.12.2022 | Vijaytv
Raja Rani 2. 27.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன்னை பரந்தாமன் தான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளி இருக்கிறான் என்று கூறினார். தன்னை அடுத்து அடியாட்கள் வைத்து என் வாயில் மதுவை ஊற்றிவிட்டார்கள் என்று கூறினார். ஆனல் அர்ச்சனா இது எல்லாம் நம்பும்படியே இல்லை. என் கணவர் குடித்துவிட்டு வந்ததற்கு குடும்பமே சேர்ந்து அவரை பேசினார்கள். ஆனால் இப்படி குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்த சரவணன் மாமாவை அனைவரும் நம்புவது நல்லதுக்கு இல்லை என்று கூறினார். செந்திலையும் அங்கு எதுவும் பேச விடாமல் செய்தார் அர்ச்சனா. பின் அடுத்த நாள் சரவணன் இந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம். இந்த தேர்தலில் இருந்து விலகிவிடு என்று கூறினார் சிவகாமி. ஆனல் சரவணன் அது சரியாக வராது. நான் கண்டிப்பாக இந்த தேர்தலில் நிப்பேன் என்று கூறினார் சரவணன். இது எனக்கும் செந்திலுக்கும் நடக்கும் போராட்டம் இல்லை, இது எனக்கும் அந்த ஊழல்வாதி பரந்தாமனுக்கும் உள்ள போட்டி என்று கூறினார். ஜெஸ்ஸி கடையில் ஆதி திருடி சென்ற நகையை காணவில்லை என்று போலீஸ்சில் புகார் கொடுத்துவிட்டார் அந்த பெண். இருந்தும் ஜெஸ்ஸி தன் கடையில் நான் தேடி பார்த்துவிட்டேன் அப்படி ஒரு நகையே இல்லை என்று கூறினார். ஆனல் யாரும் அவர் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….