ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி முன் கைதிகள் போல் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றார்கள். சிவகாமி சரவணன் மற்றும் சந்தியா இருவரும் தணிகுடுத்தனம் செல்ட்டும் என்றார். பின் சரவணன் தனக்கு இவளோ பெரிய துரோகத்தை செய்ய மனசு வந்தது என்று கேட்டார். மேலும் சந்தியா தான் சரவணனை பொய் சொல்ல வைத்து அவர் போலீஸ் ஆக வேண்டும் என்று மாற்றி விட்டார் என்று சந்தியா மீது மேலும் கோவம் கொண்டார். வீட்டில் உள்ள யார் என்ன சொன்னாலும் அதை கேட்கும் நிலையில் சிவகாமி இல்லை. இதனால் சரவணன் சிவகாமி சொன்னது போல் தனியாக செல்ல முடிவு எடுத்தார். அதை கேட்டு வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாக நின்றார்கள். ஆனால் சரவணன் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். மேலும் சந்தியாவை அழைத்துக்கொண்டுவெளியே கிளம்பினார். குடும்பத்தார்கள் தடுக்க முயற்சி செய்தும் அவரை தடுக்க முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…