Raja Rani 2 Today Episode | 28.11.2022 | Vijaytv
Raja Rani 2. 28.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அர்ச்சனாவின் அம்மா இந்த விழாவுக்கு கண்டிப்பாக எல்லா சொந்தங்களும் வர வேண்டும் என்று கூறினார். முக்கியமாக சந்தியா இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு சிவகாமி அம்மாவும் கண்டிப்பாக சந்தியா கலந்துகொள்வார் என்று உறுதி அளித்தார். சரவணன் இடம் அதை சொல்லி சந்தியாவை விடுமுறை எடுத்து வர வேண்டும் என்று கூறினார். சந்தியா அவருக்கு அழைத்த போது நடந்ததை கூறினார். இந்த விழாவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று சிவகாமி அம்மா கூறியதை கூறினார். அதை கேட்டதும் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்றார். பின் கௌரியிடம் அவருக்கு இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று கேட்ட சென்றார். ஆனால் கௌரி ஏற்கனவே சந்தியா வெளியே சென்று பிரச்சனை ஆனதால் கோவத்தில் இருந்தார். மேலும் இவர் விடுப்பு கேட்டதும் கோவத்தில் கத்தினார். செய்த தவறுக்கே பெரிய அளவில் தண்டனை இருக்கும், ஆனால் அதை பற்றி கவலை படாமல் எப்படி விடுமுறை கேட்க முடியும் என்று கத்தினார். வெளியே அனுப்பினார். பின் சரவணன் இடம் விடுமுறை கிடைக்கவில்லை, ஆனால் மீண்டும் முதிர்ச்சி செய்வதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…