Raja Rani 2 Today Episode | 28.12.2021 | Vijaytv
rajarani2.28.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டி ஆரம்பிக்க அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். போட்டியாளர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சரவணன் அங்கு இல்லை. இதனால் சரவணன் ஊருக்கு கிளம்பி இருப்பார் என சல்மா நினைத்து சந்தோசம் அடைந்தார். பின் சற்று நேரத்தில் சரவணன் அங்கு கையில் சிக்கன் உடன் வந்து சேர்ந்தார். இதை பார்த்த அர்ச்சனா மற்றும் ஆதி இருவரும் சிவகாமிக்கு சரவணன் அசைவம் சமைப்பதை சொல்ல நினைத்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் சிவகாமியே அங்கு வந்து போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்தார். அர்ச்சனா அதை பார்த்து எரிச்சல் அடைந்தார். சரவணன் அசைவம் சமைப்பதற்கு எப்படி சிவகாமி ஒத்துக்கொண்டார் என வெறுப்புடன் இருந்தார். ஆதியும் அதே நிலையில் இருந்தார். சற்று நேரத்தில் போட்டியும் ஆரம்பித்தார்கள். சரவணன் பதட்டத்தில் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் நின்றார். சந்தியா சிவகாமி இடம் மட்டும் என்ன செய்கிறார் என்று கூறியிருந்தார். அதனால் சிவகாமியும் பதட்டமாக இருந்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….