Raja Rani 2 Today Episode | 28.12.2022 | Vijaytv
Raja Rani 2. 28.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்த குடும்பத்தார்கள் உடனே அங்கு விரைந்தார்கள். ஜெஸ்ஸி என்ன தவறு செய்தார் என்று அங்கு சென்று கேட்டார்கள். அப்போது தான் ஜெஸ்ஸி கடைக்கு வந்த ஒரு பெண்ணின் நகை காணவில்லை, அது கண்டிப்பாக ஜெஸ்ஸி தான் எடுத்து இருக்க வேண்டும் என்று புகார் வந்து இருப்பதாக கூறினார். இதை கேட்ட குடும்பத்தில் இருந்தவர்கள், அவர் அப்படிப்பட்ட பெண் இல்லை எனவும், இதில் வேறு யாரோ தான் எடுத்து இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனல் ஜெஸ்ஸியை தவிர அங்கு யாருமே இல்லை என்பதால் அவரை தான் சந்தேகப்படும்படி இருக்கிறது என்று கூறினார் போலீஸ்காரர். அடுத்து ஜெஸ்ஸி கர்பமாக இருக்கிறார் என்று கூறியதால் மனம் இளகி, இந்த நாகைக்கான பணத்தை கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அந்த நகையை கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனல் பணம் உடனே ஏற்பாடு செய்ய முடியாது என்று தெரிந்து அவகாசம் கேட்டார்கள். அதற்கும் உடனே வேண்டும் என்று கூறியதால், சிவகாமி அம்மா உடனே அவரது கழுத்தில் கிடந்த செயினை கழற்றி கொடுத்தார். இதை வைத்துக்கொண்டு ஜெஸ்ஸியை விட்டுவிடுமாறு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….