Raja Rani 2 Today Episode | 29.04.2022 | Vijaytv
Raja Rani 2. 29.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு வீட்டில் அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பினார்கள். வண்டியில் அனைவரும் பேசி சிரித்து கொண்டே வந்தார்கள். ஆனால் பார்வதி மட்டும் எதோ பதட்டமாக இருந்தார். அதை சந்தியா கவனித்தார். என்ன பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் விசாரித்தார். ஆனால் பார்வதி எதுவுமே இல்லை என்று கூறினார். அர்ச்சனா தன் தங்கை திருமணத்துக்கு குடும்பமே செலவு செய்து சந்தோசமாக வருகிறது என்று நினைத்துக் கொண்டார். பின் மண்டபத்துக்கு வந்ததும் பார்வதிக்கு ஆரத்தி எடுக்க சந்தியாவை அழைத்தார் சிவகாமி . இதனால் அர்ச்சனா எரிச்சல் அடைந்தார், சந்தியா வந்ததில் தனக்கு மரியாதை இல்லை என்று நினைத்தார். விக்கி அடிக்கடி பார்வதிக்கு அழைத்து மீண்டும் மிரட்டினார். இதனால் மேலும் பதட்டம் அடைந்தார் பார்வதி. மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஆரத்தி எடுக்க சந்தியாவை அழைத்தார் சிவகாமி. அதிலும் தன்னை அவமானபடுத்தி விட்டதாக நினைத்தார் அர்ச்சனா. மேலும் மண்டபத்தில் இருக்கும் வேலைகள் அனைத்தையும் இழுத்து போட்டு செய்தார்கள் சந்தியா மற்றும் சரவணன். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..