Raja Rani 2 Today Episode | 29.06.2022 | Vijaytv
Raja Rani 2. 29.06.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது கடை வாசலிலே அமர்ந்து இருந்தார்கள் இங்கு போவது என்று தெரியாமல். சிவகாமி வீட்டுக்குள் அதை பற்றி தான் நினைத்துகொண்டு இருந்தார். சந்தியா பசியோடு இருப்பர் என்று சுட சுட சமோசா போட்டு கொடுத்தார் சரவணன். பின் சிவகாமி சாப்பிட்டாரா என்று மயில் இடம் கேட்டார். அவர் கேட்பதை தெரிந்து கொண்ட சிவகாமி தனக்கு அவர்களை பற்றி எந்த கவலையும் இல்லை, தான் சாப்பிட போவதாக கூறினார். அவர் சாப்பிடுவது தெரிந்த பின் தான் சரவணன் சாப்பிட ஆரம்பித்தார். பின் இரவு தூங்க போகும் நேரம் ரவி சிவகாமிக்கு அறிவுரை கூறினார். நீ செய்வது சர்வாதிகாரம். பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை வாழ விட வேண்டும். சாந்தியவுக்கு போலீஸ் ஆவது தன ஆசை, அதே போல் சந்தியாவை போலீஸ் ஆக்க வேண்டும் என்பதே சரவணன் ஆசை. அதை எதற்காக தடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் சொன்ன எதிஐஏயும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை சிவகாமி. அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் நடந்த பிரச்சனையை பற்றி பேசினார்கள். செந்திலுக்கு அம்மா செய்ததில் வருத்தம் அளிக்கிறது என்று புலம்பினார். ஆனால் அர்ச்சனா அவர்களுக்கு இது தான் தண்டனை என்றார். ஆனால் சரவணன் வெளியே போய் விட்டால் இந்த வீட்டு செலவு மொத்தமும் நாம் தான் செய்ய வேண்டும் என்று அவர் கூறியதும் பதட்டம் ஆனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…