ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மீண்டும் ஜெஸ்ஸி விவகாரத்தை நினைத்து யோசித்தார். இந்த ஆதி தவறு செய்யாமல் எதற்கு ஜெஸ்ஸியை பார்த்து பயப்பட வேண்டும்? அர்ச்சனாவுக்கும் ஆதி ஜெஸ்ஸி காதலித்தது தெரியும் என்று பல வித யோசனையில் இருந்தார். பின் சரவணன் என்ன யோசனை என்று விசாரித்தார். ஆனாலும் தன் தம்பி மீது அளவு கடந்த நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆனால் சந்தியா நம்பிக்கை இருக்கட்டும், ஆனால் ரெண்டு பக்கமும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். அதனால் சரவணன் உடனே ஆதியை அழைத்து விசாரித்தார். ஆனால் சரவணன் இடம் ஆதி தான் ஒரு நல்லவன், என்னை ஏமாற்ற பார்க்கிறாள் என்று நடித்தான். அதை பார்த்த சந்தியா, இவன் உண்மையை மறைக்கிறான் என்று நினைத்தார். இதனால் ஆதியை தனியாக அழைத்து விசாரித்தார். ஆனால் சந்தியாவிடம் திமிராக பேசினான் ஆதி. உங்களால் முடிந்ததை செய் என்பது போல் பேசினான். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…