ராஜா ராணி தொடரில் இன்று, சமையல் போட்டி ஆரம்பம் ஆனது. சரவணன் சிறு பதட்டத்திலேயே இருந்தார்.ஆனாலும் அவர் சமையலில் கவனம் சிதரவில்லை. கொடுத்த நேரத்திற்குள் சமைத்து முடித்தார். நடுவர்கள் ஒவ்வொரு சமையலையும் ருசித்து மதிப்பெண்கள் போட்டார்கள். கடைசியாக சரவணன் சமைத்ததை சாப்பிட்டு பாராட்டுக்கள் குவிந்தது. இதை சரவணன் இடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்கள். ஆனால் சரவணனால் முழு மனதோடு மகிழ்ச்சி அடையவில்லை. பின் நடுவர்கள் இடம், தான் சமைத்தது சிக்கன் இல்லை என்று கூறினார். அதை கேட்ட நடுவர்கள் அதிர்ந்தார்கள். இது ஒரு சைவ சிக்கன் என்பதால் இதை சமைத்தேன் என்று கூறினார். அங்கு இருந்தவர்கள் அனைவரும் கோபம் கொண்டார்கள். சந்தியா மற்றும் சரவணன் இருவரும் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சல்மா மீண்டும் நடுவர்கள் கோபத்தை தூண்டினார். இது மீண்டும் பிரச்சனையை பெரிதாக்கியது. சரவணன் மற்றும் சந்தியா இருவரும் என்ன பேசுவது என தெரியாமல் முழித்தார்கள்.அர்ச்சனாவுக்கு நடந்த அனைத்தையும் பார்த்து மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…