Raja Rani 2 Today Episode | 29.12.2022 | Vijaytv
Raja Rani 2. 29.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் ஆதி இனியாவது குடும்ப கஷ்டங்களை நினைத்து ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இது போல சேர்க்கும் பணம் நகைதான் நமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார். ஜெஸ்ஸி இனி கண்டிப்பாக இதை கடை பிடிப்பேன் என்று கூறினார். காட்டுக்குள் சென்றவர்கள் ஒவ்வொருவராக வேறு வேறு பாதையில் சென்றவர்கள் அடுத்த இடத்தை தேடி சென்றார்கள். அப்துல் கௌரி மேடம் இருப்பதை பார்த்து சந்தோசத்தில் தான் தான் முதலில் வந்ததாக கூறினார். ஆனல் கௌரி அது உண்மை இல்லை, உனக்கு முன்னரே சந்தியா இங்கு வந்து விட்டார் என்று கூறினார் கௌரி. அதை கேட்டதும் அப்துல் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு முன் சந்தியா வந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்து அடுத்து ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். அனைவரும் வந்து சேர்ந்தும் ஜோதி மட்டும் வராததால் பதட்டம் அடைந்தார்கள். இரண்டு குழுவாக பிரிந்து ஜோதியை தேட ஆரம்பித்தார்கள். பின் ஜோதி இருக்கும் இடத்தில் மயங்கி விழுந்து இருப்பதை பார்த்தார்கள். உடனே அவரை மயக்கம் தெளிய வைத்து அழைத்து வந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….