Raja Rani 2 Today Episode | 30.03.2022 | Vijaytv
Raja Rani 2. 30.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா, சரவணன் வேண்டும் என்றே சந்தியாவை வெளியே அழைத்துச் செல்ல எதோ ஒரு காரணம் சொல்லி இருக்கிறார் என்று சந்தேகம் கொண்டார். ஆனால் யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. பின் சாமியார் கொடுத்த லேகியத்தை சாப்பிட நினைத்து அதை வெயிலில் காய வைத்தார். அவர் அசந்த நேரம் அந்த லேகியத்தை பார்த்த ரவி அதை பஞ்சாமிர்தம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தார். பாதி சாப்பிடும் போது அர்ச்சனா அதை பார்த்து விட்டார். உடனே அதை வாங்கி சென்றார். சந்தியா கோச்சிங் சென்டர் கிலம்பிக்கொண்டு இருந்தார். அந்த நேரம் ரவி சாப்பிட்ட லேகியம் வயிற்று வலியை உண்டாக்கியது. இதனால் வீட்டில் ஒரு கலேபரத்தை உண்டாக்கினார். இந்த நிலையில் சரவணன் கடையில் வேலை இருப்பதாக சொன்னதால் சிவகாமி சந்தியாவை கடைக்கு செல்லுமாறு கூறினார். சந்தியாவும் உடனே அந்த சமையத்தை பயன்படுத்தி சரவணன் உடனே கோச்சிங் சென்டர் கிளம்பினார். போகும் வழியில் சரவணனுக்கு அழைப்பு வந்தது. கல்யாண வீட்டுக்கு ஸ்வீட் கொடுக்க வேண்டி இருப்பதை மறந்துவிட்டார். உடனே போய் ஆக வேண்டும் என்று கூறினார். சந்தியாவும் தான் தனியாக போய் வருவதாக கூறினார். சரவணன் கடை வேலையை பார்க்க கில்மாபினார். இதனால் வருத்தமாக இருந்தார் சந்தியா. பின் ஆட்டோவில் செல்லலாம் என்று ஒரு ஆட்டோவில் ஏறினர். அந்த ஓட்டுநரின் நடவடிக்கை சரி இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…