ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமியிடம் ரவி அப்பா என்ன முடிவு எடுத்து இருப்பதாக கேட்டார். ஆனால் அதற்கு சிவகாமி சரி வர பதில் சொல்லாததால் ரவி அப்பா கோவத்தில் பேச ஆரம்பித்தார். சின்ன வயதில் தனக்கு படிப்பு நன்றாக வருண் என்று தெரிந்தும் எனக்கு விபத்து நடந்ததை பார்த்து தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கடை வைக்க போனவன் சரவணன். அன்றில் இருந்து இன்று வரை குடும்பத்துக்காக மட்டுமே அவன் உலைதுக்கொட்டினான். மேலும் பார்வதி மற்றும் ஆதியை படிக்க வைததும் அவன்தான். செந்திலுக்கு கடை வைத்து கொடுத்ததும் சரவணன் தான். மேலும் செந்தில் கடை நஷ்டத்தில் போன போது மீண்டும் காசை போட்டு கடையை மேலும் வளர்த்தது அவன் தான். இது நாள் வரை அவனுக்காக எதுவுமே செய்தது இல்லை. குடும்பம் சந்தோசமாக இருந்தால் மட்டும் போதும் என்று அவன் சந்தோசத்தை மூட்டை கட்டி வைத்தவன் என்று சரவணன் செய்த அனைத்தையும் கூறினார். மேலும் சந்தியா படித்தவள் தான் ஆனால் ஒரு நாளும் அந்த படிப்பை வைத்து வீட்டில் யாரிடமும் மரியாதை குறைவாக நடந்தது இல்லை. முக்கியமாக சரவணன் திறமையை இந்த ஊருக்கே காட்டியது சந்தியா தான். தன் மனைவி ஆசை படும் விஷயத்தை சரவணன் நிறைவேற்ற ஆசை படுவது ஒன்றும் பெரிய தவறில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பிள்ளைகளை ஒதுக்கி வைத்து தான் பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் தானே ஒரு முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். சரவணன் சந்தியா இருவரையும் அழைத்து வந்து வீட்டுக்குள் நிறுத்தினார். அவர்களும் சிவகாமி காலில் விழுந்து கெஞ்சினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…