Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 30.07.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 30.07.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா தொடரில் இன்று, சிவகாமி அம்மாவின் ஆப்பரேஷன் நல்லபடியாக நடந்தது முடிந்தது. அவரும் குணமடைந்தார். அப்போது ஹேமாவின் பிறந்தநாளுக்கு சிவகாமி குடும்பத்தில் அனைவருக்கும் அழைப்பு வைத்தார் சௌந்தர்யா. சிவகாமியும் தன் குடும்பத்தோடு வருவதாக கூறினார். ஹேமா தனக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு பாரதி கொடுக்க வேண்டும் என்று கூறினார். பாரதியும் என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஹேமா தன் அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும் என்றார். இத்தனை வருடங்களாக ஏமாற்றி விட்டதால், இந்த பிறந்தநாளுக்கு தன் அம்மாவின் புகைபடத்தையாவது காட்ட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு பாரதி அதிர்ச்சி அடைந்தார். ஆனால் கொஞ்ச நேரத்தில் தான் ஹேமாவின் அம்மாவை காட்டுவதற்கு ஒத்துக்கொண்டார். பின் கண்ணம்மவை வீட்டில் விட வந்தார் சௌந்தர்யா. மேலும் கண்ணம்மா, சௌந்தர்யாவிடம் தனியாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஹேமாவின் அம்மாவாக வேறு எந்த பெண்ணையும் காட்டினால் தான் பாரதியை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் சௌந்தர்யா அது போல் எதுவும் நடக்காது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…