Raja Rani 2 Today Episode | 31.08.2022 | Vijaytv
Raja Rani 2. 31.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதிக்கு ஒரு நல்ல வரன் பார்த்து இருப்பதாக சிவகாமியின் மாமியார் கூறினார். ஆதிக்கு திருமணம் செய்து வைத்தால் தான் இப்படி பட்ட பெண்கள் தொல்லை இருக்காது என்று முடிவு எடுத்தார். சிவகாமியும் அப்படியே செய்யலாம் என்று கூறினார். ஆனால் சந்தியா அதை கேட்டதும் அவசரம் வேண்டாம். ஜெஸ்ஸி பிரச்சனையே இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை. பின் எதற்காக இவளோ அவசரம் என்றார். அதை கேட்டதும் சிவகாமி மற்றும் அவரது மாமியார் சேர்ந்து அவரை திட்டி வாயை மூட வைத்தார்கள். பின் சரவணன் இடம் தனியாக வந்து பேசி பார்த்தார். ஆதிக்கு இவளோ அவசரமாக பெண் பார்ப்பது சரி இல்லை என்றார். ஆனால் சரவணன் இதற்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். மேலும் ஆதி தவறி செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறினார். அடுத்த நாள் ஆதிக்கு பெண் பார்க்க குடும்பத்தில் அனைவரும் கிளம்பினார்கள். ஆனால் ரவி மற்றும் செந்தில் இருவருமே ஆதி திருமணத்தில் அவசரபடுகிறோம் என்று தோனுவதாக கூறினார்கள். ஆனால் சிவகாமி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பெண் வீட்டுக்கு சென்று பெண்ணையும் பார்த்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…