Raja Rani 2 Today Episode Review | 04.10.2021 | Vijaytv
Rajarani.2.04.10.2021
ராஜாராணி தொடரில் இன்று, சரவணன் இனிப்பு செய்யும்போது கையில் சுட்டுக்கொள்கிறார். சந்தியா வாங்கி தந்த கைக்கவசத்தை சக்கரை எடுத்து தருகிறார். பின் கடையில் இருந்த அல்வாவை எடுத்துகொண்டு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்புகிறார். சந்தியாவும் தன் அறையை சுத்தம் செய்து அலங்கரித்து முதலிரவுக்கு தயார் ஆகிறார். சற்று நேரத்தில் சிவகாமி தன் இரு மருமகள்களையும் அழைத்து ஆடி மாசம் பிறந்து விட்டதால் பார்த்து நடந்துகொள்ள கூறுகிறார். இதை கேட்ட சரவணன் மற்றும் சந்தியா இருவரும் வருத்தம் அடைந்தனர். பின் அர்ச்சனாவின் அம்மா அர்ச்சனாவுக்கு தொலைபேசியில் அழைத்து அவரது தங்கை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக கூறினார். உடனே வீட்டில் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என பொய் சொல்லி தன் அம்மா வீட்டிற்கு கிளம்புகிறார். அடுத்து என்ன ஆகும்? காணொளியை பார்க்க..