Raja Rani & Barathi Kannamma Serial Today Episode | 18.07.2022 | Vijaytv
Raja Rani 2 Barathi Kannamma sangamam. 18.07.2022
ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மஹாசங்கமம் தொடரில் இன்று, டாக்டர் பாரதி ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டு வாசலில் நின்றார். கண்ணம்மா லக்ஷ்மியுடன் கிளம்பி வந்தார். நால்வரும் வெளியே எங்காவது செல்லலாம் என்று கிளம்பினார்கள். ஜானகி ராமன் இருவருக்கும் செய்து கொடுத்த சத்தியத்துக்காக இருவரும் குழந்தைகளுடன் சேர்ந்து வெளியே செல்ல இந்த முடிவை எடுத்து இருந்தார்கள். ஆனால் எங்கு போவது என்று எதுவும் முடிவு செய்யவில்லை. போகும் வழியில் ஹேமா ரோட்டில் உள்ள ஒரு போர்டை பார்த்து thenkaasikku போகலாம் என்றார். உடனே அங்கேயே போகலாம் என்று முடிவு எடுத்து காரில் கிளம்பினார்கள். அதே நேரம் சரவணன் சந்தியாவை இந்த கேசை வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டார் அந்த சாமியார். அதனால் உடனே ஊருக்குள் தண்டோரா போட வைத்தார். பூமி பூஜை நடக்காததால் அம்மன் உக்கிரமாக இருக்கிறாள் என்றும். அதை சரி செய்ய சாமியார் ஒரு சிறப்பு பூஜை செய்யவும் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் அறிவிப்பு வந்தது. இதை கேட்ட சிவகாமி மேலும் கோவத்தை சந்தியா மற்றும் சரவணன் இடம் கட்டினார். இதனால் குடும்பமாக சேர்ந்து அந்த சாமியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று சிவகாமி கிளம்பினார். பின இடத்தில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் பாரதி கண்ணம்மா மற்றும் அவர்களது குழந்தைகளை பார்த்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…