சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்!
பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா அவர்களின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்து இருப்பது சின்னதிரையை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
நாதஸ்வரம், கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முக பிரியா அவர்களின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருப்பது சின்னத்திரையை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது என்பது மன வேதனைக்குரியது.
அரவிந்த் சேகர் ஒரு பாடி பில்டர். அவருக்கு ஏன் இந்த நிலை என்று மருத்துவர்களிடன் கேட்ட போது, உடலை மெருகேற்ற அழகை கூட்ட தற்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் மருத்துவ ரீதியாக பல மருந்துகளை, ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர். அது உடலை மெருகேற்றும், முகத்தை பொலிவாக்கும் ஆனால் உள்ளுறுப்புகளை பலவீனப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
“ ஒரு காலத்தில் மாரடைப்பு என்றால் 50-60 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே வரும். ஆனால் தற்போதைய காலத்தில் மாறிப்போன உணவு, பழக்க வழக்கங்களால் 30-40 வயதினரையும் மாரடைப்பு பயமுறுத்தி வருகிறது “