Siragadikka Aasai – 20th May 2024 today episode review
Siragadikka Aasai Muthu Meena today episode.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து மற்றும் மீனாவின் முதலாம் திருமண நாளை ரவி சுருதி சிறப்பாக கொண்டாட எண்ணுகிறார்கள். அதற்காக அங்கு இருக்கு ஒவ்வொருவரையும் முத்துவையும் மீனாவையும் பற்றி பேசி வாழ்த்த அழைக்கிறார்கள். முதலில் பேசும் மனோஜ் குத்தலாக பேசி தான் இல்லை என்றால் முத்துவிற்கு திருமணமே நடந்திருக்காது என நக்கலாக கூறுகிறார். பின்னர் ரோகினி மீனா முத்துவை மாற்றுவது தான் மீனாவிற்கு நல்லது என மீண்டும் குத்தலாக பேசுகிறார்.
அடுத்து பேசும் அண்ணாமலை முத்துவையும் மீனாவையும் சிறந்த ஜோடி எனக் கூற, ஶ்ருதியோ மீனாவை பாராட்டி அதே சமயத்தில் முத்துவுடன் வாழ்வது எளிதல்ல என கூறுகிறார். பின்னர் பேசும் ரவி முத்து மீனாவை திருமணம் செய்த பிறகு நிறையவே நல்ல விதமாக மாறி இருப்பதாக கூறுகிறார். கடைசியாக பேசும் விஜயா ஆரம்பத்தில் முத்து மற்றும் மீனாவை கிண்டல் செய்யுமாறு பேச ஆரம்பித்தாலும் முடிக்கும் பொழுது முத்து மீனா ஒருவருக்கு ஒருவர் சரியான ஜோடி என முடிக்கிறார்
பாராட்டுகளை பெற்ற பிறகு முத்து காதல் என்றால் என்ன என்பதை மீனாவை திருமணம் செய்த பிறகு தான் உணர்ந்தேன் எனக் கூறுகிறார். இது நன்றாக இருப்பதாகவும் கூறுகிறார். மீனாவோ முத்து எளிதாக புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர் ஆனால் அவரை திருமணம் செய்தது தன் வாழ்வில் ஒரு பாக்கியம் எனக் கூறுகிறார். தனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது முத்து எனவும் கூறுகிறார். ஆனால் முத்துவின் வாழ்வில் முத்துவை மாற்றிய ஏதோ ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனக்கூறி அது என்னவென்று அவர் கூறும் பொழுது தான் அவருடைய முழு மனைவியாக மாறுவேன் என கூறுகிறார். இதை கூறும்பொழுது மனோஜ் அண்ணாமலை மற்றும் விஜயா மூவரும் திருதிருவென விழிக்கிறார்கள்.
அடுத்ததாக சந்திராவை பேச அழைக்கும் பொழுது அதே நேரத்தில் சத்யா வீட்டிற்குள் நுழைய முத்து கோபமாகிறார். மீனா அவரை கட்டுப்படுத்துகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.