விஜயாவுக்கு ஷாக்! Siragadikka Aasai today episode 13th June 2024 review
Siragadikka Aasai Vijaya annoyed PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சிறிது நேர குழப்பத்திற்கு பிறகு சுருதிக்கு மீனா தான் தொலைபேசியில் இருக்கும் பொழுது வெளியே போய் விடுவதாக கூறியது புரிகிறது. அவர் அதைக் கூற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது விளங்குகிறது. பின்னர் மனோஜிடம் முத்து கோபப்படுகிறார். தன்னுடைய மனைவி காணாமல் போனதை பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ரோகினி காணாமல் போனபொழுது தான் உதவியதாக கூறுகிறார். மீனா விஜயாவை நிறுத்தி என் கணவர் என் மீது அக்கறை கொள்ளவில்லை என கூறினீர்களே அவர் கண் கலங்கி நின்றதை பார்த்தீர்கள் தானே என அதிர்ச்சி கொடுக்கிறார்.
பின்னர் முத்துவும் மீனாவும் மொட்டை மாடியில் அமர்ந்து ஒன்றாக உணவு உண்ணுகிறார்கள். அப்பொழுது சத்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற விஷயத்தை முத்து மீனாவிடம் கூறுகிறார். அதே சமயத்தில் மீனாவிற்கு தன் கணவர் தன்னை தேடி பதறிப் போனது எண்ணி உள்ளூர மகிழ்ச்சியும் இருக்கிறது.
அடுத்த நாள் மீனா தன் தாய் வீட்டிற்கு செல்கிறார் அங்கு சீதா மற்றும் சந்திராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த சத்யாவிடம் எதற்காக நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாய் என வினவுகிறார். பின்னர் இது சிட்டியுடைய ஆலோசனை என்றால் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறுகிறார். சத்யாவும் இதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்டு, சிட்டியிடம் இனி வீணா மற்றும் முத்துவின் விஷயங்களில் தலையிட வேண்டாம் எனக் கூறுகிறார்.