விஜயா தரும் ஷாக்! Siragadikka Aasai today episode 17th June 2024 Review
Siragadikka Aasai family shocked at Vijaya (PC Hotstar).jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் சற்றே கடுப்பேற்றுகிறது. விஜயா எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் மீனா பொறுத்துக் கொள்வதை ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக் கொள்ள முடியவில்லை. விஜயா இன்று நடன உடையில் வெளியே வர ஸ்ருதி அவரை கட்டி அணைத்துக் கொள்கிறார். பின்னர் தான் நடனப்பள்ளி ஆரம்பிக்க இருப்பதை பற்றி அவர் கூறுகிறார். இதைக் கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. சிறிது பாராட்டுகளும் கிடைக்கிறது.
விஜயா பார்வதியின் வீட்டில் வைத்து தனது நடனப்பள்ளியை தொடங்குகிறார். அதற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ருதியின் அம்மா சுதாவை அழைக்கிறார். குத்து விளக்கை மீனா வெட்கமில்லாமல் கழுவி துடைத்து எண்ணெய் போட்டு திரி போட்டு வைத்திருக்கிறார். ஆனால் அவரைத் தவிர சுதா சுருதி ரோகிணி மற்றும் பார்வதியை அழைத்து விளக்கேற்ற வைக்கிறார் விஜயா. அதற்கும் மீனா செய்து கொண்டே இருக்க முத்து மட்டும் கோபப்படுகிறார்.