சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் ஒரு நாள் வேலை செய்ததற்கு முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து குடும்பமே அவரை எழுப்ப முயற்சி செய்கிறது விஜயா அவரை கொஞ்சிக் கொஞ்சி எழுப்புகிறார். வெளியே அனைவரும் மனோஜின் நடத்தை பற்றி கிண்டல் அடிக்க ரோகினி கோபப்படுகிறார். சுருதியோ வீட்டிலேயே அதிகம் வேலை செய்வது மீனாதான் மீனா ஆனால் ஓய்வெடுப்பதில்லை எனக் கூறுகிறார். இந்த சமயத்தில் கடுப்பாகி ரோகினி மனோஜை அடித்து எழுப்ப அப்பொழுதும் மனோஜ் எந்திரிக்கவில்லை. அதன் பிறகு முத்து தண்ணீரை எடுத்து மனோஜின் மேல் ஊத்துகிறார். அதற்கு ரோகிணி கோபப்பட இதுதான் ஒரே வழி அவரை எழுப்ப எனக் கூறுகிறார். இப்படித்தான் அப்பாவின் பணத்தையும் மீட்டெடுக்க முடியும் எனவும் கூறுகிறார் முத்து.
இது நடந்ததற்கு பிறகு விஜயா மீனாவிடம் மனோஜிற்கு சிக்கன் செய்யக் கூறுகிறார். மீனா மனோஜிற்கு தான் எதுவும் செய்ய முடியாது எனக் கூற, இரவு ரூம் தராததால் தான் இவ்வாறு பேசுகிறார் மீனா என கோபப்படுகிறார் விஜயா. கூசும்படி வார்த்தைகளும் கூறுகிறார். மீனா அதைக் கேட்டு கண் கலங்குகிறார். பின்னர் வாசுதேவனும் சுதாவும் சேர்ந்து முத்துவின் வீட்டிற்கு ஏசி அனுப்ப முத்து அதை வாங்க மறுத்து இந்த வேலை எல்லாம் வேண்டாம் என சுதாவிடம் கூறுகிறார். பின்னர் சுதாவும் வாசுதேவனும் பேசி மனோஜின் கடையில் வாங்கிய ஏசியை திருப்பி அவரிடமே கொடுப்பது என முடிவெடுக்கிறார்கள். இதை மனோஜின் கடைக்கே சென்று சுதா கூற மனோஜ் பணம் போகிறதே என வருத்தம் அடைகிறார். பணம் திருப்பி தர வேண்டாம் என சுதா கூறுகிறார், இருந்தாலும் ரோகிணி பணத்தை கொடுத்து விடுகிறார். பின்னர் முத்துவைப் பற்றி தவறாக இவர்கள் மனதில் இன்னும் பதிய வைக்கிறார் சுதா.