சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சுதா நன்றாக ரோகிணி சுதாவிற்கு பணம் கொடுப்பதற்காக தனது தாலியை கழட்டி அடமானம் வைக்கிறார். அதை கண்டு மனோஜ் நெகிழ்ச்சி அடைகிறார். வீட்டிற்கு வந்து இதை பெரிய பிரச்சினையாக்குகிறார்கள் மனோஜம் ரோகிணியும். முத்து கோபப்பட முத்துவிற்கு ஆதரவாக மீனா பேசுகிறார். அதை பார்த்து விஜயா கோபமடைகிறார். ரவியும் முத்து செய்தது தவறு எனக் கூறுகிறார். சுருதியோ ஏசி பிடிக்கவில்லை என்றால் அதை அண்ணாமலையிடம் அல்லவா கூறி இருக்க வேண்டும் ஏன் என் பெற்றோரை காயப்படுத்த வேண்டும் என கேட்கிறார். அதற்கு அண்ணாமலையும் முத்து செய்ததுதான் தவறு எனக் கூறுகிறார்.
பின்னர் மீனாவும் இந்த பிரச்சனையை வேண்டுமென்றே தான் சுதாவும் ரோகினியும் உருவாக்கி இருக்கிறார்கள் எனக் கூறுகிறார். ஆனாலும் அவர்கள் விரித்த வலையில் முத்து சிக்கியது முத்துவின் கோபத்தால் தான் என அறிவுரை கூறுகிறார். பின்னர் ஸ்ருதியிடம் ரவி முத்து செய்தது எந்த அளவு தவறா அதே அளவு கேட்காத வீட்டிற்கு வேண்டாம் என சொல்லியும் ஏசி அனுப்பியது சுதா மற்றும் வாசுதேவனின் தவறு எனக் கூறுகிறார். அதை சுருதியும் புரிந்து கொண்டார் பின்னர் தனக்காக பேசிய தன் கணவரை நினைத்து மெச்சுகிறார்.