Siragadikka Aasai today episode 29th May 2024 Review | Vijay Television
Siragadikka Aasai Meena sick PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினிக்கு புது தாலி வாங்கி தர வேண்டும் என விஜயா கூறுகிறார. அண்ணாமலையோ விஜயா மீனா வேறு மற்ற மருமகள்கள் வேறு என விஜயா பாரபட்சம் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறார. விஜயாவோ ரோகிணி பணக்கார மருமகள் எனக் கூறுகிறார் மனோஜ் சொந்த தொழில் ஆரம்பத்திருப்பதால் இனி தன் மனைவிக்கு தாலியை அவரே வாங்கி தருவார் எனக் கூறிவிட்டு இதில் தலையிட வேண்டாம் என அண்ணாமலை விஜயாவிடம் கூறுகிறார். பின்னர் ரோகினியிடம் விஜயா கீழ் வீட்டு வாடகை பணத்தில் தாலியை திருப்பலாம் எனக் கூற அதெல்லாம் வேண்டாம் என ரோகிணி மறுக்கிறார். பணக்கார பெண்ணின் பரந்த மனப்பான்மை இது தான் என விஜயா மெச்சுகிறார். இதைக் கேட்டு சுருதி மீனாவுக்கு ஆதரவாக விஜயாவிடம் பேசுகிறார் கடைசிவரை ரோகிணி பணம் வாங்கிக் கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் வித்யாவிடம் இதெல்லாம் தன்னுடைய திட்டம் தான் எனக் கூறுகிறார். கழுத்தில் மஞ்சள் கயிறோடு இருக்கும் வரை மனோஜ் அதை பார்த்து குற்ற உணர்ச்சி அடைவார் விஜயாவும் அப்பாவை பற்றி கேட்டு எச்சரிக்க மாட்டார் என கூறுகிறார்.
முத்து வீட்டுக்கு வர அங்கு மீனாவிற்கு காய்ச்சல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மீனாவை மனோஜின் அறையில் தூங்க சொல்லிவிட்டு மருந்து வாங்க போகிறார். அதற்குள் மனோஜம் ரோகிணியும் வீட்டில் களேபரம் செய்கிறார்கள். தங்களது அறை தங்களுக்கு வேண்டும் என கூறுகிறார்கள். தான் தொழில் செய்வதால் வெளியில் படுக்க முடியாது என மனோஜ் கூறுகிறார். அண்ணாமலை சொல்லியும் கேட்காமல் விஜயா தூங்கிக் கொண்டிருக்கும் மீனாவை தரதரவென இழுத்து வந்து அவமானப்படுத்துகிறார். அந்த சமயத்தில் முத்துவும் ரவி சுருதியும் வந்து விடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து பேசி இதில் ஒரு தீர்வு கொண்டு வரலாம் என பார்த்தால் சுருதியோ தன்னுடைய முறை வரும்பொழுது தன் வீட்டிற்கு சென்று விடுவேன் என கூறுகிறார். விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணியும் மனோஜும் வேறு ஹோட்டலில் சென்று தங்குவோம் என மிரட்டுகிறார்கள். கடைசியாக அண்ணாமலை, விஜயா மீனா மற்றும் ரோகினி ஒரு அறையிலும் அண்ணாமலை முத்து மற்றும் மனோஜ் இன்னொரு அறையிலும் தூங்கலாம் என தீர்ப்பளிக்கிறார். அதைக் கேட்டு விஜயா கடுப்படைகிறார். மனைவியைப் பிரிந்து தூங்க முடியாது என மனோஜ் வேறு புலம்புகிறார்.