ரோகினிக்கு தலையில் இடி! Siragadikka Aasai today episode 31st May 2024 Review
Siragadikka Aasai Rohini shocked PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவும் மீனாவும் மீனாவின் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மருந்து வாங்கி விட்டு வரும்பொழுது முத்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய வேண்டாம் என மீனாவுக்கு அறிவுறுத்துகிறார். அந்த சமயத்தில் அவர்கள் க்ரிஷ் மற்றும் கிருஷின் பாட்டியை பார்க்கிறார்கள். ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷின் மீது ஒரு வண்டி மோதிவிட்டு சென்றதாக அவர் கூறுகிறார். பாட்டி தேம்பித் தேம்பி அழ முத்து மீனாவும் கிருஷ்ஷை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.
இந்த விபத்தை பற்றி ரோகினிக்கு அவரது தாய் தொலைபேசியில் கூறுகிறார். ரோகினி மனோஜிடம் இலவசமாக பொருட்களை மருத்துவமனையில் கொடுப்பது நமக்கு விளம்பரமாகும் எனக் கூறி அதை சாக்காக வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார். அங்கே முத்துவையும் மீனாவையும் அவர் பார்த்தாலும் பேசி சமாளித்து விடுகிறார். பின்னர் கிரிஷ்ஷை பார்த்து கதறுகிறார். குற்ற உணர்ச்சி அவரை மிகவும் குத்துகிறது பின்னர் அவர் கிளம்பும் பொழுது முத்துவும் மீனாவும் க்ரிஷ் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கே தான் இருக்கப் போவதாக கூறுகிறார்கள். முத்து கிருஷ்ஷின் அத்தையைப் பற்றி கோபமாக பேச அதற்கு ரோகினி கடுப்பாகிறார்.