Siragadikka Aasai Today Episode Review| 10.01.2024 | Vijay Television
siragadikka aasai manoj in shock8235169136340896534.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று வித்யா மனோஜை தொலைபேசியில் அழைத்து ரோகினியை காணவில்லை எனக் கூறுகிறார். மனோஜ் முத்துவால் தான் ரோகினி காணாமல் போனார் எனக்கூறி சண்டை இழுக்க குடும்பத்தில் அனைவரும் முத்துவை குறை சொல்கிறார்கள். மீனா மட்டுமே முத்துவின் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார். பின்னர், அண்ணாமலை முத்துவையும் மனோஜுடன் சேர்ந்து ரோகினியை தேடுமாறு கூறுகிறார். முத்துவும் மனோஜும் ரோகினியை தேடி போக அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர், ரோகினியின் பார்லரில் வேலை பார்க்கும் பெண் ரோகினி பணத்தை எடுத்துக்கொண்டு குமாரபாளையம் என்னும் ஊருக்கு செல்ல யோசித்ததாக கூறுகிறார். முத்து இதை மீனா விடம் கூறி முத்து மீனா மற்றும் மனோஜ் மூவரும் ரோகினியை தேடி குமாரபாளையம் செல்கிறார்கள். மீனாவோ அந்த ஊர் கிரிஷ் பாட்டியின் சொந்த ஊர் என கூறுகிறார்.