Siragadikka Aasai Today Episode Review – 11.01.2024 | Vijay Television
Siragadikka Aasai Rohini in shock PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசையில் இன்று, ஒருபுறம் ரோகினி தன் தாயிடம் மனோஜை பற்றி அழுது புலம்புகிறார். ரோகிணியின் தாய் அவரின் தவறுகளையும் சுட்டிக்காட்டி இதை அனுசரித்து போகுமாறு கூறுகிறார். ஆனாலும் ரோகினி மனோஜ் மீது கோபமாகவும் ஆண்களையே இனி நம்ப மாட்டேன் எனக் கூறுகிறார்.
விஜயாவை பார்வதி கேள்வி மீது கேள்வி கேட்டு மனோஜ் செய்த தவறுகளையும் எடுத்துக் கூறுகிறார். இருந்தாலும் விஜயா மீனா மற்றும் முத்து இவர்கள் மீது கோபமாக இருக்கிறார். பார்வதியோ ரோகினி கோபத்தை விபரீதமாக எதையாவது செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார். விஜயாவிற்கு பயம் கூடுகிறது.
இதன் நடுவில் மனோஜை முத்து வம்பு இழுத்துக் கொண்டே வர ஒரு கட்டத்தில் வெறுப்பாகி மனோஜ் காரை விட்டு கீழே இறங்கி நடக்கிறார். அப்பொழுது ரோகினியின் மகனான க்ரிஷ் அடித்த பந்து முத்துவின் காரில் வந்து விழ முத்துவும் கிரிஷும் பார்த்துக் கொள்கிறார்கள். பின்னர், கிரிஷ் அவருடைய பாட்டி வீட்டிற்கு முத்து மீனா மற்றும் மனோஜை அழைத்து செல்கிறார். அங்கே இவர்களை பார்த்த ரோகினி பின் வாசல் வழியாக ஒளிந்து கொள்கிறார். ரோகினியின் தாயிடம் எப்படியாவது சமாளித்து விடுமாறு கூறுகிறார்.