Siragadikka Aasai today episode review – 12.01.2024 | Vijay Television
Siragadikka Aasai Rohini gets angry PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் கலங்கி போய் உட்கார்ந்திருக்க ரோகினியின் தாய் பொய் மீது பொய் கூறுகிறார். கிரிஷ் தனது அத்தை கல்யாணி வந்ததைப் பற்றி கூறியும் அது வேறொரு உறவுக்கார பெண் என கூறுகிறார். பின்னர் ரோகினியின் புகைப்படத்தை மனோஜ் காட்டும் பொழுதும் கூட இவர் யார் என்றே தெரியாது என சாதிக்கிறார். மனோஜ் அதற்குப் பிறகு உடைந்து அழ ஆரம்பிக்கிறார். தான் ரோகினிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் இனிமேல் எந்த வேலை என்றாலும் போவதாகவும் கூறி அழுகிறார்.
பின்னர் அவர்கள் ரோகினியை தேடி செல்கிறார்கள். ரோகிணியோ இப்பொழுதும் மீனாவையே குறை சொல்கிறார். ரோகிணியின் தாய் கண்டிப்பாக ரோகிணியின் மேல் இன்னும் பெரிய தவறு இருக்கின்றது என்றும் அதனால் மனோஜிடம் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்துகிறார்.
மனோஜும் முத்துவும் வாக்குவாதம் செய்து கொண்டே வீட்டுக்குள் நுழைகிறார்கள். மனோஜ் விஜயாவிடம் ரோகிணி காணாமல் போனதற்கு முத்து தான் காரணம் எனக் கூற, முத்துவோ மனோஜை தண்டச்சோறு என கூறுகிறார். அந்த சமயத்தில் ரோகினி பெட்ரூமில் இருந்து வெளி வருகிறார் ஓடிப் போய் விடலாம் என தான் நினைத்தேன். ஆனால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள் எங்கு போவேன் என கூறுகிறார். கூடவே ரோகிணி, வீட்டில் இனிமேல் யாரும் மனோஜை பற்றி தவறாக பேசக்கூடாது, அந்த உரிமை மனோஜின் தாய் தந்தைக்கு மட்டுமே இருப்பதாக கூறுகிறார். இதற்கு சுருதியும் ரவியும் ஒத்து ஊத, முத்து கடுப்பாகிறார். மீனா இந்த வீட்டிற்கு பணம் கொடுப்பது என் கணவர் அவர் கூறுவதில் தவறில்லை எனக் கூற, அதற்கு ரோகிணி நானும் தான் பணம் கொடுக்கிறேன் என்பதோடு எபிசோட் முடிவடைகிறது.